பிரிவு ..... ஆழ்மனதின் போராட்டம்... இந்த போராட்டத்திற்கு உரியவள் எங்கோ ஒரு திசையில் என் கண்மறைவில் என் கண்ணீராய் .... என் நேசம் தென்றலாய் போய் சேருமா ? என் அன்புக்குரியவளிடம் ......
தோழி: சிரித்து பேசி மகிழ்ந்தபோது.... ஒரே தட்டில் உண்டபோது.... ஒன்றாக விளையாடி உறங்கி ......... அப்போதெல்லாம் உணராத உன் அன்பை...... பிரிவு என்னும் ஒற்றை சொல் புரிய வைத்தது.... உனக்கான என் அன்பை என் மனதில் உன் ஆழத்தை உன் மனதில் நம் நட்பை.........
என் கண்ணில் தூசு என்றால் உன் கண்கள் கலங்குகின்றது ... எனக்கு காய்ச்சல் என்றால் உன் உடம்பு இளைக்கிறது.... எப்படியாக என்னுள் நிறைந்து இருக்கும் என் தந்தையே .... உன்னை போற்றி பாராட்ட தமிழ் அகராதியை புரட்டுகின்றன் வார்த்தை தேடி......