Friday, April 11, 2008

தோழி

பக்கத்தில் இருக்கும் பத்திர காளி
உன் நட்பு என்ற அருள் வேண்டி நாளும்
வணங்கும் சிறிய பூசாரி யாக உனது தோழன்

Thursday, April 10, 2008

வாழ்க்கை

இன்று நான்
நாளை நீ

இறக்கத்தான செய்கிறோம்
பிறப்போம் என்று தெரியாமல்....

இது மாறும் விதியா
அல்ல
வாழும் நீயதியா....

யோசிப்போம் வாழ்வை நேசிப்போம்
வாழும் ஒவ்வொரு ஒவ்வொரு நொடியும் !!!!!


Monday, April 7, 2008

பெண்

கருவில் இருப்பது
பெண்

என்று
அழிக்க துடிக்கும்
கணவனுக்கு தெரியாதா!!!!

தன் மனையாலும் பெண் என்று....

தோழி

பிரிவு .....
ஆழ்மனதின் போராட்டம்...
இந்த போராட்டத்திற்கு உரியவள்
எங்கோ ஒரு திசையில்
என் கண்மறைவில் என் கண்ணீராய் ....
என் நேசம்
தென்றலாய் போய் சேருமா ?
என் அன்புக்குரியவளிடம் ......

தோழி

தோழி:
சிரித்து பேசி
மகிழ்ந்தபோது....
ஒரே தட்டில்
உண்டபோது....
ஒன்றாக விளையாடி
உறங்கி .........
அப்போதெல்லாம்
உணராத உன் அன்பை......
பிரிவு
என்னும் ஒற்றை சொல்
புரிய வைத்தது....
உனக்கான என் அன்பை
என் மனதில் உன் ஆழத்தை
உன் மனதில்
நம் நட்பை.........

Sunday, April 6, 2008

தோழன்

என்றாவது பிரிய நேர்ந்தால்....
சந்தோஷமாக ஏற்பேன் ...
மரணத்தை உன் மடியினில்
....

தந்தை

என் கண்ணில் தூசு
என்றால் உன் கண்கள் கலங்குகின்றது ...
எனக்கு காய்ச்சல் என்றால்
உன் உடம்பு இளைக்கிறது....
எப்படியாக என்னுள் நிறைந்து இருக்கும்
என் தந்தையே ....
உன்னை போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை புரட்டுகின்றன் வார்த்தை தேடி......